பதிவு செய்த நாள்
17
ஜூலை
2021
11:07
மதுரை: சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் ஆடி தபசு மூன்றாம் நாள் விழாவில் கணபதி ஹோமம், பூஜைகளுடன், ஸ்வாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம், சங்கர நாராயணர் சுவாமிகள் கோயிலில் மூன்றாம் நாள் விழாவில் மாலை4 மணிக்கு ஸ்வாமிகளுக்கு, எண்ணை காப்பு சாற்றி, 15 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன், அரசு வழிகாட்டுதலின்படி, தினசரி மாலை நேர பூஜையில் கலந்து கொண்டு, சிவபுராணம், கோளாறு பதிகம், அம்மன் திருப்பதிக்கங்கள் பாராயணம் செய்தனர்.கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.