சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி முதல் நாளில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2021 01:07
காரைக்கால்: ஆடி மாதம் முதல் நாள் மற்றும் சனிக்கிழமையை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த சில நாட்களாக இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது.நேற்று ஆடி முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்து தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.பரிகாரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யவும் எள் தீபம் ஏற்றவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் நளன் குளத்தில் பக்தர்கள் நீராட ஏதுவாக இதுவரை நீர் நிரப்பப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.