* தாயாகிய பூமி நம் விருப்பங்களை நிறைவேற்ற தாயாராக இருக்கிறாள். அவளைப் பாதுகாப்போம். * நம் தந்தையாகிய கடவுள் அனைவரிடமும் கருணை காட்டுகிறார். அவரை வணங்குங்கள். * சமையலுக்காக அரிசி எடுக்கும் போது, ஒரு கைப்பிடியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய எடுத்து வைப்போம். * நற்பணியில் மனதை செலுத்திக் கொண்டிருந்தால் உயர்ந்த மனநிலை உண்டாகும் * லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக வாழ்க்கையை கருதாமல் பிறருக்கு உதவி செய்யுங்கள். * பிறருடைய குற்றத்தை அன்பால் திருத்தும் போது நிலையான பலன் கிடைக்கும். * தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். * நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் துாய்மையாக இருக்கும். * பொருளாதார நிலைக்கேற்ப தினமும் தர்மம் செய்யுங்கள். * பேசுவதில் கணக்காக இருந்தால் பிரச்னை வராது. நம் சக்தியும் வீணாகாது. * நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக் குறைவானதே. * தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் ‘தியாகம் செய்தேன்’ என்ற எண்ணத்தை விட்டுவிடுவது சிறந்தது. * பிறருக்கு மட்டுமில்லாமல் கோபத்தால் நமக்கும் தீமையே உண்டாகிறது. * பேச்சில் பெருந்தன்மை, செயலில் சுயநலம் கொண்டவர்களாக பலர் இருக்கின்றனர்.