வாழ்க்கையில் எந்தவொரு முயற்சியும் செய்யாதவர்களுக்குத்தான் ‘போர்’ அடிக்கும். முன்னேற நினைப்பவர்கள் எந்நேரமும் ஒரு பணியை செய்து கொண்டே இருப்பர். இருந்தாலும் அதற்கென்று ஒரு காலம் இருக்கிறது. அதற்குள் செய்து முடித்தால்தான் அந்த செயலுக்கும் மதிப்பு கிடைக்கும். * தொழுகையை உரிய நேரத்தில் செய்யுங்கள். * பணம் நம்மை விட்டுப் போவதற்கு முன் தான, தர்மம் செய்யுங்கள். * வயதும், காலமும் வீணாகும் முன் நற்செயலை செய்யுங்கள். * பெண் குழந்தைகளுக்கு விரைவாக திருமணம் செய்யுங்கள். * மரணத்திற்கு மறுமைக்கு உரிய நற்செயலை செய்யுங்கள். * சமாதானம் மூலம் பிரச்னையை தீர்த்துக் கொள்ளுங்கள். * மரணத்திற்கு முன் பாவமன்னிப்பு தேடிக்கொள்ளுங்கள். * வாங்கிய கடனை உடனே கொடுத்து விடுங்கள். வாழ்க்கையும், கடிகாரமும் ஒடிக்கொண்டே இருக்கிறது. கவனமாக இருங்கள்.