கோடைகாலத்தில் பாலைவனத்தில் செல்லும்போது நீருற்றுடன் கூடிய சோலை தென்பட்டால் எப்படி இருக்கும். அதுபோல் மறுமை நாளில் இறைவனின் தீர்ப்பை எதிர்பார்த்து மஹ்ஷர் மைதானத்தில் வெயிலில் மக்கள் நின்று கொண்டிருப்பர். இம்மையில் அவரவர் செய்த நன்மை, தீமைகளுக்கு ஏற்ப வியர்வையில் நனைந்து கொண்டிருப்பர். அந்த மைதானத்தில் நிழல் என்று பார்த்தால் அர்ஷின் நிழல் மட்டும்தான். ‘அர்ஷ்’ என்பது இறைவனின் அரியணை. இந்த அரியணையின் நிழல் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது. மறுமையில் ஏழு பிரிவினரைத் தவிர வேறு யாருக்கும் அர்ஷின் நிழல் கிடைக்காது. 1. நீதி செலுத்தும் அரசன். 2. இறைவழிபாட்டில் தன் வாழ்க்கையை கழித்தவர். 3. பள்ளிவாசலின் நினைவிலேயே இருப்பவர். 4. நட்பையும் பகையையும் இறைவனுக்காகவே வெளிப்படுத்துபவர்கள். 5. உயர்குலத்தை சேர்ந்த ஒரு பெண், தகாத உறவுக்கு அழைத்தபோது அதை ஏற்காதவர். 6. வலது கொடுப்பதை இடது கை அறியாமல் தர்மம் செய்பவர். 7. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்ணீர் சிந்துபவர்.