கும்பகோணத்தில் மகாமக விழா நடக்கும் போது 15 கோயில்களில் இருந்து சுவாமி எழுந்தருளல் நடக்கும். இதில் 15 கோயில்களில் இருந்து சிவன் எழுந்தருள்வார். இங்குள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து மட்டும் காளிகா பரமேஸ்வரி அம்மன் குளக்கரைக்கு எழுந்தருள்வாள். இந்த கோயிலில் ஆடி கடைசி வெள்ளியன்று திருவிளக்கு பூஜை நடத்தப்படும்.