அவலுார்பேட்டை : தாதங்குப்பம் கிராம மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
மேல்மலையனுார் அடுத்த தாதங்குப்பம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு நேற்று கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கிராம பெண்கள், தங்கள் வீடுகளிலிருந்து கூழை தலையில் சுமந்து, கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.நிகழ்ச்சியையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.