திருநெல்வேலி: நெல்லையில் ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி மாத செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வு எதிரொலியாக கோயில்கள் திறக்கப்பட்ட பின்பு, ஆடி முதல் செவ்வாய் கிழமையான நேற்று அம்மன் கோயில்களில் , மாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மக்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். வண்ணார்பேட்டை, பேராத்துச்செல்வி அம்மன் கோயிலில் ஏராளமானோர் பங்கேற்றனர். பாளை., ஆயிரத்தம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், படையல், தீபாராதனை நடந்தது.