திருவாடானை : திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் கோயில்களில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிேஷகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பக்தி பாடல்களை பாடினர்.