விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலம்,சோழவந்தான், தென்கரை,பாலமேடு, வாடிப்பட்டி, அலங்காநல்லுரர் பகுதிகளில் ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கிராமங்களில் உள்ள மாரியம்மன், முத்தாலம்மன், காளியம்மன் கோயில்களில் பக்தர்களுக்கு கூழ் காய்ச்சி வழங்கப்பட்டது. சிறப்பு அபிஷேக ஆராதனை,பூஜைகள் நடந்தன.