நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. மாரியம்மனுக்கு பால், இளநீர், சந்தனம் போன்ற 21 வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல் உற்சவருக்கும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதுபோலவே நத்தம் பகுதி பகவதிம்மன், காளியம்மன் கோவில்களிலும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடந்தது.