பதிவு செய்த நாள்
24
ஜூலை
2021
01:07
ஓமலுார்: ‘‘பாகல்பட்டி சென்றாய பெருமாள் கோவில் சொத்து, நகைகளை மீட்க வேண்டும்,’’ என, அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சேலம் மாவட்டம், ஓமலுார், பாகல்பட்டியில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. பரம்பரை அறங்காவலராக இருந்த ேஹமலதா, கோவில் நலனுக்கு எதிராக செயல்பட்டதால், 2009ல பதவி நீக்கம் செய்யப்பட்டு, சேலம் உதவி கமிஷனர் தக்காராக நியமிக்கப்பட்டார். தற்போது கோவிலுக்கு சொந்தமாக, 214.48 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அதில், பட்டா பெயர் மாற்றத்துக்கு, 63 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று ஆய்வு செய்தார். அறங்காவலர்களிடம் உள்ளதாக கூறப்படும் கோவில் நகை, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க உத்தரவிட்டார். தொடர்ந்து அருகில் உள்ள, ‘புஜங்கீஸ்வரர்’ கோவிலை ஆய்வு செய்தார். அப்பகுதியில் பல ஆண்டாக வசிக்கும், 300 குடும்பத்தினர் பட்டா கேட்டு, அமைச்சரிடம் மனு அளித்தனர்.