காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 87 வது ஜெயந்தி விழா நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது . இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். மருத்துவ சேவைக்காக சங்கரா பல்நோக்கு மருத்துவமனைக்கு ஆஞ்சியோகிராம் கருவிகள் வாங்க ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது. காஞ்சிபுரம் பாலாறு அருகே புனிதமான மணி மண்டபத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடித்து வருகிறார் .இன்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87 வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. 69-ஆவது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயந்தி விழாவில் மேன்மைதங்கிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காணொளி மூலம் பங்கேற்று இரு நூல்களை வெளியிடுகிறார். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமுதாய பாதிப்புகளை தடுக்க பண்டைய காலத்தின் கலாச்சாரம் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்றார். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேசபக்தி தெய்வபக்தி குரு பக்தி போன்ற புனிதத்தன்மை நம்மை ஈர்த்தது. இந்த சமுதாயம் நாட்டு மக்களுக்கு அவரது ஆசி கிடைக்கட்டும் இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உருவ படத்திற்கு முன் அவரது பாத சிலைக்கு விஜயேந்திரர் பூஜை செய்தார் . விழாவில் நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கவர்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.