ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருவிழா : ஆக., 1 ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2021 10:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில் ஆக., 1 ல் ஆடி திருவிழா கொடி ஏற்றப்பட உள்ளது. ஆடி தேரோட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் முக்கிய விழாவாக ஆடி திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆக., 1 ல் கோவில் அம்மன் சன்னதி முன்புள்ள கொடிகம்பத்தில் காலை 9 -10 :30 மணிக்குள் ஆடித் திருவிழா கொடி ஏற்றப்பட உள்ளது. இதனைதொடர்ந்து ஆக., 8 ஆடி அமாவாசை அன்று கோவிலில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடக்கும். கொரோனா பரவலை தடுக்க ஆக., 9 ல் ஆடித் தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. ஆக., 11ல் ஆடித்தபசு, ஆக.,12 ல் கோவில் வளாகத்திற்குள் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெற உள்ளது.