பதிவு செய்த நாள்
31
ஜூலை
2021
02:07
வேலுார்: வேலுார், காட்பாடி அருகே வள்ளிமலை முருகன் கோவிலில், ஆடி கிருத்திகையன்று பக்தர்கள் காவடி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆக., 1 முதல் 4 வரை நடக்கும் ஆடி கிருத்திகை விழாவில், பக்தர்கள் கொண்டு வரும் காவடிகள், கோவிலுக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. காவடி இல்லாமல் வரும் பக்தர்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் மொட்டையடிக்க தனி அறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அர்ச்சனை, அன்னதானம் செய்யம், கோவில் குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தெப்ப உற்வசம் கிடையாது. * ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆக., 2ல், நடக்கும் ஆடி கிருத்திகை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து அதிகாலை, 4:00 முதல் இரவு, 8:00 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.