தேவிபட்டினம்-தேவிபட்டினம் அருகே அழகன்குளம் நடுத்தெரு முத்துமாரியம்மன் கோயில், முளைப்பாரி விழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன.முளைப்பாரிகளை கோயிலில் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். கோயிலில் இருந்து முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் நேர்த்திக் கடன் நிறைவேற்றினர்.