* இலவசம் வேண்டாம். உழைப்பே நிலைக்கும். * தாயை நம்பும் குழந்தையை போல, கடவுள் மீது நம்பிக்கை வை. * ரகசியம் என்பதே உலகில் இல்லை. அனைத்தும் கடவுளின் ஆணையால் நடக்கிறது. * உடம்பை புறக்கணிக்காதே. * மற்றவர் வம்பு செய்தால் இடத்தை விட்டு விலகு. * பெரியவர்கள், நல்லவர்கள், சாதுக்களிடம் பணிவாக நடந்து கொள். * அடக்கம் இல்லாதவனின் உள்ளத்தில் தீய ஆசைகள் பெருகும். * தாயன்புக்கு ஈடானது வேறில்லை. * உலகம் முழுவதும் அன்பு அலைகள் பரவட்டும். * கடவுளை எப்போதும் நினை. துன்பம் வராது. * நல்லவனாக வாழ்ந்தால் சொர்க்கத்தை அடையலாம். * பிறரை மகிழ்ச்சிபடுத்துவதே பெரும் புண்ணியம். * நம்பிக்கையும், பொறுமையும் இருந்தால் முயற்சியில் வெற்றி பெறலாம். * உன்னை புறக்கணிப்பவர் மீது வெறுப்பு கொள்ளாதே. * இன்பம், துன்பத்தை சமமாக நினை. * ஆடம்பரத்தை தவிர்த்து பிறருக்கு உதவுங்கள்.