ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்ட ராம சுவாமி கோயிலில் ஆனி உற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் 26ல் சீதா திருக்கல்யாணம் நடக்கிறது.பத்து நாட்கள் நடக்கும் இவ்விழா ஜூன் 30 வரை நடக்கிறது. நேற்று காலை கோயில் கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க காலை 10.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு மேல் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 26 இரவு 7 மணிக்கு மேல் சீதா திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுவாமிநாதன் செய்து வருகிறார்.