திருக்கோஷ்டியூர்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் பத்து நாட்கள் நடைபெறும். ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு இவ்விழா நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் நடைபெறுகிறது. இன்று காலை 7:15 மணிக்கு பெருமாள் கல்யாண மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிப்படம் உட்பிரகாரத்தில் வலம் வந்தது. திக்பாலர்களுக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து பெருமாளுக்கும், கொடிபடத்திற்கும் பூஜைகள் நடந்தன. பின்னர் காலை 9:55 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பூஜைகள் நடந்து சிறப்பு தீபாரதனைகள் நடந்தது. பின்னர் ராஜாங்க மரியாதை நடந்தது. மாலையில் பெருமாளுக்கும், ஆண்டாள்,அர்ச்சகருக்கும் காப்புக் கட்டப்பட்டு சுவாமியும் ஆண்டாளும் தென்னமரத்து வீதியில் பறப்பாடு நடந்தது.