கடலுார் கோவில்களில் தரிசனத்திற்கு தடை; பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2021 04:08
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கடலுார் மாவட்டத்தில் இன்று 2ம் தேதி ஆடி கிருத்திகை, நாளை 3ம் தேதி ஆடிப் பெருக்கு மற்றும் 8ம் தேதி ஆடி அமாவாசையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். கொரோனா தொற்று பரவாமல் இருக்க மாவட்டத்தில் நேற்று முதல் நாளை 3ம் தேதி வரையும், வரும் 8ம் தேதி என 4 நாட்கள் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுமாவட்டத்தில் பல்வேறு கோவில் நிர்வாகங்களுக்கு தெரியாததால் நேற்று காலை திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வர் கோவில் உட்பட அனைத்து கோவில்கள் திறக்கப்பட்டன. சிறிது நேரத்தில் கோவிலை மூட வேண்டும் என்ற தகவல் கிடைத்ததும் தரிசனம் செய்ய அனுமதிமறுத்து கோவில்கள் மூடப்பட்டன. சில கோவில்களில் பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர். கோவில்களில் சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் மட்டுமே தொடர்ந்து நடக்கிறது.