காரைக்கால் அரசலாற்றில் ஆடிப்பெருக்கு விழா: காவிரி தாயை வழிபட்டனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2021 04:08
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் அரசலாற்றில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டப்படுகிறது.காவேரியின் கடைமடை பகுதியில் உள்ள காரைக்காலில் அரசலாறு. வாஞ்சியாறு.திருமலைராயனாறு ஆகிய ஆறு கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. தமிழகத்தில் காவேரி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில் கடைமடைப்பகுதியான காரைக்காலில் தடுப்பு அணை மூலம் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. அதிகாலையில் குடும்பத்துடன் ஆற்றங்கரைக்கு வந்து புதுமண தம்பதிகள் புத்தாடைகள் அணிந்துகாவேரி ஆற்றை வணங்கி, சூரிய பூஜைகள் செய்து தங்கள் திருமண நாளில் அணிந்திருந்த மாலையை ஆற்றில் விட்டனர்.பின் புதுதாலிக்கயிறும் மாற்றிக்கொண்டனர்.குடும்பத்தில் உள்ள பெண்கள் ஆற்றுகரையில் விளக்கு ஏற்றி,தேங்காய், பழங்கள், பிரசாதங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து காவேரி தாயை வணங்கினர். இதில் ஆடிப்பெருக்கு விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.