திருச்சி கோவில்களில் ஆடி 18ல் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2021 04:08
திருச்சி: ஆடிப்பெருக்கு தினத்தன்று, திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், வயலூர் முருகன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன.கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்த போது, இந்த கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு நித்திய பூஜைகள் மட்டும் நடைபெற்றது.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இன்று (3ம் தேதி) பிரசித்தி பெற்ற கோவில்களில், பொதுமக்கள் வழிபாடு நடத்த தடைவிதித்து, மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, கீதபுரம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை போன்ற இடங்களில் பொதுமக்கள் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.