வீரவநல்லுார் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2021 02:08
திருநெல்வேலி: வீரவநல்லுார் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வீரவநல்லுார் திரவுபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும் 13ம் தேதி கடைசி வெள்ளியன்று அர்ச்சுனர், திரவுபதி அம்மன், சங்கிலி பூதத்தார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. வரும் 18ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் வைபவத்துடன்திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 13ம் தேதி மாலைநடைபெற இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக நடைபெறாது என அக்தார் பாபநாசம் தெரிவித்துள்ளார்.