மீனாட்சி அம்மன் கோயிலில் தேசிய பாதுகாப்பு படை ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2021 03:08
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் ஒன்றரை மணி நேரம் ஆய்வு செய்தனர்.
இக்கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் அவ்வப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு செய்வர். நேற்று இப்படை எஸ்.பி., சந்தோஷ், உள்நாட்டு பாதுகாப்பு படைப்பிரிவு எஸ்.பி., சோலைராஜ், மதுரை துணைகமிஷனர் தங்கத்துரை உள்ளிட்டோர் கோயிலின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு நடைமுறைகளில் சில மாறுதல்களை செய்யுமாறு கோயில் நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் அறிவுறுத்தினர். முன்னதாக கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் ஆலோசித்தனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், இது வழக்கமான ஆய்வுதான். மீனாட்சி கோயில், விமான நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தோம். பயங்கரவாதிகள் தாக்கினால் அதை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து விரைவில் ஆபரேஷன் (களப்பயிற்சி) நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.