பதிவு செய்த நாள்
08
ஆக
2021
06:08
மயிலாடுதுறை : மேலப்பெரும்பள்ளம் வலம்புரிநாதர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ருத்ர ஹோமம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் வடுவகிர்கண்ணி அம்பாள் சமேத வலம்புரிநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோவில் பித்ரு சாபம், ஸ்ரீ ஹத்தி தோஷம், பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி தலமாக விளங்கிறது. கோவிலில் சுவாமிக்கு அமாவாசை தோறும் ருத்ர அபிஷேகம், மற்றும் ருத்ர ஹோமம் செய்து வழிபட்டால் பித்ரு, ஸ்ரீஹத்தி, பிரம்மஹத்தி தோஷங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நிலையில் ஆடி அமாவாசையான இன்று இந்த கோவிலில் தோஷங்கள் நீங்கவும், உலக நன்மை வேண்டியும், கொரோனோ நோயிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும் ருத்ர ஹோமம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 24 கலசங்களில் புனிதநீர் வைக்கப்பட்டு, மணிபட்டு குருக்கள், கோவில் அர்ச்சகர் ஞானஸ்கந்த குருக்கள் ஆகியோர் தலைமையில் 18 சிவாச்சாரி யார்கள் வேத மந்திரம் ஓத, ருத்ர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரைக் கொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் முருகனுக்கு சிறப் பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை செய்துவைக்கப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோமத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.