தர்மபுரி: ஆடி அமாவாசையையொட்டி, தர்மபுரி அருகே கோவில் பூசாரிக்கு, 108 கிலோ மிளகாய் கரைசலில் அபிஷேகம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பனஹள்ளியில், பெரிய கருப்புசாமி கோவிலில் நேற்று ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. சுவாமிக்கு மிளகாய் வத்தல் மற்றும் பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மதுபானம், சுருட்டு உள்ளிட்டவற்றை வைத்து வழிபட்டனர் கோவில் பூசாரி கோவிந்தன், அருள் வந்து கத்திமேல் ஏறி நின்று, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். அப்போது பக்தர்கள் கோவிந்தன் மீது, 108 கிலோ மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மிளகாய் யாகம் நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடு, கோழி பலியிட்டு வழிபட்டனர்.