பதிவு செய்த நாள்
09
ஆக
2021
01:08
பெரியகுளம் : ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர் நிலைகளில் பக்தர்கள் குளித்து குலதெய்வங்களை வழிபட்டனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் அருகே வராகநதியில் பிரசித்திப்பெற்ற ஆண், பெண் மருதமரம் நடுவே பக்தர்கள் குளித்து, கோயில் ராஜகோபுர தரிசனம் செய்தனர். வராகநதீஸ்வரர் கோயில், சச்சுமடை பாண்டி முனீஸ்வரர் கோயில், கம்பம்ரோடு காளியம்மன், வரம் தரும் காளியம்மன், கீழரதவீதி காளியம்மன், வீச்சுகருப்பணசாமி கோயில், சங்கிலிகருப்பணசாமி, மஞ்சளாற்று கருப்பணசாமி கோயில்களில் குலதெய்வம் பூஜை நடந்தது.
ஆண்டிபட்டி: ஆண்டி பட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலில் மூலிகை தைலம், பால், தயிர் உட்பட 21 வகை அபிேஷகம், மலர் அலங்காரம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்தனர். பக்தர்களுக்கு துளசி, செந்துாரம், இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.