விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடி பூர தேரோட்டம்: கோயில் வளாகத்தில் நடந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2021 01:08
கடலூர் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடி பூர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று (10ம் தேதி) கொரோனா தொற்று காரணமாக கோயில் வளாகத்தில் தேரோட்டம் நடந்தது. தேரில் விருத்தாம்பிகை அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அம்மனை தரிசனம் செய்தனர்.