உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. விழானை முன்னிட்டு, ஒன்பது கன்னி குழந்தைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு பூஜையில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு சுமங்கலி பூஜை செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.