திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவில், ஆடிபூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பச்சையம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் பெரியாண்டவர் கோவிலில், ஆடிபூரத்தை முன்னிட்டு பெரியநாயகி அம்மனுக்கு வளைகாப்பு நிழ்கச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.