Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ... திருவண்ணாமலையில் ஹிந்து உரிமை மீட்பு, பூஜாரிகள் உரிமை காக்கும் மாநாடு திருவண்ணாமலையில் ஹிந்து உரிமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.95 லட்சத்தில் முகப்பு கூரை அமைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.95 லட்சத்தில் முகப்பு கூரை அமைப்பு

பதிவு செய்த நாள்

12 மார்
2026
04:03

நங்கநல்லுார்; ஆஞ்சநேயர் கோவிலில், 95 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட முகப்பு கூரை, சுத்திகரிப்பு குடிநீர் மையம் ஆகியவை, பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.


நங்கநல்லுாரில், ஆதி வியாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கடந்த, 1995ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இக்கோவிலில், தினமும் காலை முதல் இரவு வரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். தொகுதி எம்.எல்.ஏ., அன்பரசன் மேம்பாட்டு நிதி, 95 லட்சம் ரூபாயில், இக்கோவிலின் முகப்பு நிழற்கூரை மற்றும் சுத்திகரிப்பு குடிநீர் மையம் அமைக்கப்பட்டன. அவற்றை, ஆஞ்சநேயர் கோவில் ஸ்தாபகர் ரமணிஅண்ணா இன்று திறந்து வைத்தார். 


இதில் பங்கேற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் கூறியதாவது: காஸ், பெட்ரோலிய பொருட்கள் தட்டுபாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக, கூட்டம் நடத்தி முதல்வர் ஆலோசனை செய்துள்ளார். ஜல் ஜீவன் திட்டம், கல்வித் துறை, 100 நாள் வேலை திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்க்வில்லை என, போராட்டம் செய்து வருகிறோம். ஆனால், தேர்தலுக்காக பிரதமர் பொய் பிரசாரம் செய்கிறார். வேளச்சேரி- – பரங்கிமலை இடையேயான மேம்பால ரயில் திட்டத்தில், ரயில்களை இயக்குவதில் சிக்கல் உள்ளது. அதை சரி செய்த பின் தேர்தல் அறிவிக்கப்பட்டால், விழா நடத்தாமல் ரயில்கள் இயக்கப்படும். ஆலந்துார் அரசு கல்லுாரி கட்டடத்திற்கு, 22.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் பூமி பூஜை போடப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை இணை கமிஷனர் ரேணுகாதேவி, ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar