சபரிமலை நடை இன்று திறப்பு: ஆக.17 முதல் ஆவணி, ஓண பூஜைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2021 01:08
சபரிமலை: சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது. நாளை நிறை புத்தரிசி பூஜையும், ஆக.17 முதல் ஆவணி பூஜைகளும் நடைபெறுகிறது.
இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு பூஜைகள் இல்லை. இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் அபிேஷகம் நடைபெறும். 5:55 முதல் 6:20 மணிக்கிடையிலான முகூர்த்தத்தில் நெற்கதிர்களால் நிறை புத்தரிசி பூஜைகள் நடைபெறும். பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.ஆக. 17 முதல் ஆவணி மாத பூஜைகளும், ஆக. 19 முதல் ஓண பூஜைகளும் நடைபெறும்.
ஆக. 21ல் திருவோண சிறப்பு பூஜை நடைபெறும். ஆக.20,21,22 தேதிகளில் கோவிட் கட்டுப்பாடுகளுடன் ஒணவிருந்து பக்தர்களுக்கு வழங்கப்படும். ஆக.23 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை முதல் ஆக.23 வரை ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இரண்டு தடுப்பூசி அல்லது 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழ்களுடன் பக்தர்கள் செல்ல வேணடும்.