பழநி: பழநி மலைக்கோயில் தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு பழநி, மலைக்கோயில் தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரானா தோற்று பரவலைத் தடுக்க விடுமுறை நாட்களில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. மேலும் பழநி ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் தண்டவாளம், ரயில்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.