பதிவு செய்த நாள்
15
ஆக
2021
02:08
பல்லடம்: பல்லடம் அடுத்த அல்லாளபுரத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஉலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. அங்கு, உண்ணாமலை அம்மன் சமேதராக உலகேஸ்வர சுவாமி அருள்பாலிக்கிறார். புகழ்பெற்ற இக்கோவில், பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல், சிதிலமடைந்து கிடந்தது. கும்பாபிஷேகம் நடத்தி கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதன்படி, கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த, 2018ம் ஆண்டு, கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்து, தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடத்துக்கு, பாலாலயம் எனப்படும் இறைவன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பக்தர்கள் கூறுகையில், உலகேஸ்வர சுவாமி கோவில் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மட்டுமன்றி, பிரசித்தி பெற்ற பழம்பெருமை வாய்ந்த கோவிலாகும். மூன்று ஆண்டுகளாக கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதை தொடர்ந்து, கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே, புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.