புதுச்சேரி: குயவர்பாளையம் செல்வமுத்துக்குமார சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.
குயவர்பாளையம் சுப்ரமணியர் கோவில் வீதி முத்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத செல்வ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தில் ராஜகோபுரம், கொடிமரம் அமைத்து, புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இன்று 19ம் தேதி காலை 7.30 மணிக்கு யாகசாலை பிரவேசம், மாலை 5.௦௦ மணிக்கு முதற்கால யாக பூஜை, தமிழ்வேத திருமுறை பாராயணம் நடக்கிறது. மகா கும்பாபிஷேகம், நாளை 20ம் தேதி அதிகாலை 4.௦௦ மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளுடன் துவங்குகிறது.காலை 7.15 மணிக்கு வள்ளி தேவசேனா சமே செல்வக்குமார சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12.௦௦ மணிக்கு மகா அபிஷேகம், இரவு 8.௦௦ மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, கும்பாபிஷேக விழாவின்போது காலை 6.௦௦ மணி முதல் 7.30 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 7.31 மணி முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி ஜெகஜோதி மற்றும் ஊர் பிரமுகர்கள் செய்துள்ளனர்.