திருத்தளிநாதர் கோயில் யானை சிவகாமி உடல் நலமின்றி இறந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2021 03:08
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் யானை சிவகாமி 54 உடல் நலமின்றி இறந்து.
குன்றக்குடி ஐந்து கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலுக்கு 4வயதாக இருந்த போது பெண் யானையாக சிவகாமி வந்தது. தொடர்ந்து 50 ஆண்டுகளாக கோயில் விழாக்களில் உற்சாகமாக பங்கேற்றது. இந்நிலையில் 2 நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த சிவகாமி சிகிச்சை பலனின்றி இன்று காலை 12.30 மணிக்கு இறந்தது. குன்றக்குடி பொன்னம்பலம் அடிகள் சிவகாமியின் உடலைப் பார்த்து கண்கலங்கினர். தொடர்ந்து கோவில் நந்தவனத்தில் நல்லடககம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறா ள்: ஆதினகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் சிவகாமியின் உடலுக்கு மலர். வஸ்திரம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார் . தொடர்ந்து பக்தர்கள் பலரும் சிவகாமிக்கு கண்ணீர அஞ்சலி செலுத்தி வருகின்றனர் மாலை 4.00 மணிக்கு நல்லடக்கம் நடைபெற உள்ளது.