புதுச்சேரி: லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவிலில், ஆடி சுவாதி நட்சத்திர மகோற்சவம் நடந்தது.இந்த மகோற்சவம், புதுச்சேரி மாநில ஆதிசைவ சுந்தரமூர்த்தி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், நேற்று முன்தினம் நடந்தது. அன்று காலை 7:00 மணி முதல் 11:30 விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, ஏகாதச ருத்ர ஜபம், மகா அபிஷேகம் நடந்தது.மாலை 6.௦௦ மணிக்கு புதுச்சேரியை சேர்ந்த 5 சிவாச்சாரியார்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விருதினை, திருக்கண்ணங்குடி பாலாமணி சிவாச்சாரியார் வழங்கி, பாராட்டினார்.ஏற்பாடுகளை, டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்தனர்.