விருதுநகர் : விருதுநகர் முன்னிட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆவணி திருவிழா ஆக. 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் எட்டாவது நாள் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதருடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.