ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளியன்று சுமங்கலிகள் மேற்கொள்வது வரலட்சுமி விரதம். இந்நாளில் பூஜையறையில் மாக்கோலமிட்டு, மகாலட்சுமியை மலர்களால் அலங்கரித்து வழிபடுவர். நிறைகுடத்தில் தேங்காய், மாவிலை, லட்சுமியின் மஞ்சள் முகம் ஆகியவற்றை வைத்து லட்சுமியை ஆவாஹனம் செய்வர். மணமான பெண்கள் இந்த விரதமிருந்தால் மஞ்சள், குங்குமத்துடன் வாழும் பேறு கிடைக்கும்.