Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று ஆவணி அவிட்டம்: பூணுாலின் ... சித்தி முக்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா சித்தி முக்தி விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆன்மிக புகழ் பரப்பும் ஓரிக்கை மகா மண்டபம்
எழுத்தின் அளவு:
ஆன்மிக புகழ் பரப்பும் ஓரிக்கை மகா மண்டபம்

பதிவு செய்த நாள்

22 ஆக
2021
12:08

 பரமேஸ்வர அவதாரமான ஆதிசங்கரர், நாடு முழுதும் நடந்தே சென்று, ஆன்மிகத்தை பரப்பினார். இறுதியாக, காஞ்சி ஷேத்திரத்திற்கு வந்து சேர்ந்தார். அப்போது, காமாட்சி அம்மன் மிகவும் உக்கிரமாக இருந்தார். அவரை தணிப்பதற்காக சக்கரம் நிறுவி, காமாட்சியம்மன் உக்கிரத்தை ஆவாஹனம் செய்து, சாந்த சொரூபிணியாக்கினார்.

இதையடுத்து, காஞ்சியில் சங்கர மடத்தையும் நிறுவி, குரு பரம்பரையையும் ஏற்படுத்தினார். இம்மடத்தின், 68வது பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள். அவருக்கான மகா மண்டபம், காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை கிராமத்தில், பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகளுடன், பழங்கால முறையில், பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

மணி மண்டபம் உருவான விதம் குறித்து, சங்கர மடத்தின் கோபாலபுரம் மணி அய்யர், ஸ்ரீவித்யா உபாசகர் தினகரன் சர்மா ஆகியோர் கூறியதாவது:பிரதோஷ மாமா என அழைக்கப்படுபவர், வெங்கடராம அய்யர். ஏழை பிராமணரான அவர், 68வது பீடாதிபதிக்கு மண்டபம், பிரமாண்டமாக கருங்கல்லியே கட்ட வேண்டும்; அது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்க வேண்டும் என்று கருதினார். அதற்காக, பாலாறு ஆற்றங்கரையோரம் ஓரிக்கையில், பலருடைய உதவியால், அங்கு பல ஏக்கர் வாங்கினார். அங்கு மகா மண்டபம் கட்ட, 1990ல் இருந்து முயற்சிகளை மேற்கொண்டார். 1997 ஜூன் மாதம், ஸ்திர லக்னத்தில் பூமி பூஜைக்கு நாள் பார்க்கப்பட்டது.

பழங்கால கட்டட முறை: மகா மண்டபத்தின் கர்ப்பக்கிரஹம் மேல் 100 அடி உயர விமானம் வர வேண்டும். அடியில் பைல் பவுண்டேஷன் போட்டால், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் நிற்காது. என்ன செய்வது என்று ஆலோசித்தோம்.மதுரை மீனாட்சி அம்மன், ராமேஸ்வரம் கோவில்கள் போல, அதே தொழில்நுட்பத்தில், மணலால் நிரப்பி, சுண்ணாம்பு சேர்த்து உறுதி செய்யப்பட்டு, அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. மகா பெரியவரின், 100 வயதை கணக்கில் வைத்து, மகா மண்டபத்தின் கர்ப்பக்கிரஹ விமானமும், 100 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது. கர்ப்பக்கிரஹத்தில், மகா பெரியவர் அருள்பாலிக்கும் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பேளா ஸ்தாபனம்: மகா மண்டபத்தில், 100 துாண்கள் உள்ளன. அது, மகா சுவாமியின், 100 வயதை குறிப்பிடுவதாக உள்ளன. சேர, சோழ, பல்லவர் கால கட்டக்கலை முறைப்படி, இரண்டு குதிரை, சிங்கம், அதன் வாயில் உருளும் பந்து உள்ளது.மகா மண்டபத்தின் பாவு கற்களின் நடுவில் கற்சங்கிலியும் தொங்கவிடப்பட்டுள்ளது. பாவு கற்களின் கீழ், பேளா ஸ்தாபனம் செய்யப்பட்டது. வெள்ளிப் பெட்டியில், 28 பொருட்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன.தென், வடமேற்கு பக்கத்தில் உள்ள சுவரில் குரு பரம்பரையும், ஒரே கல்லால் ஆன மகா சுவாமிகளுடன், பிரதோஷ தாண்டவச் சிற்பமும் உள்ளது.

சந்தனப் பாதுகை: மகா பெரியவரின் பாதத்தில் அணிந்த சந்தனப் பாதுகை, பலர் கைங்கர்யத்தால் தங்க கவசம் போடப்பட்டது. 2011ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்த அன்று முதல், அந்த பாதுகைகள், ஓரிக்கை மணி மண்டபத்தில் வைக்கப்பட்டு, ஆராதனை செய்யப்படுகின்றன. பாதுகைகளை வைக்க, தங்கத் தகடு வேயப்பட்ட வெள்ளி மண்டபமும் செய்யப்பட்டுள்ளது.தென்மேற்கு பகுதியில், இரண்டு கருங்கற்களுக்கு இடையே 150 கிலோ எடை மணி பொருத்தப் பட்டு உள்ளது.

ஒரே கல்லால் மகா நந்தி: அடுத்ததாக நந்தி மண்டபம், 16 துாண்களால் அமைக்க பட்டு உள்ளது. 50 டன் கல்லால் நந்தி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. அந்த துாண்கள், பல்வேறு சப்தங்கள் எழுப்பும் வகையில், பழங்கால தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன.நந்தி மண்டபம் அருகே 45 அடி உயர, ஒரே கல்லால் ஆன தீப ஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் உள்ள 48 அடி உயரம் ராஜகோபுரமும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது.

தடாக பிரதிஷ்டை: மண்டபத்தை சுற்றி 30 ஆயிரம் சதுர அடியில் 12 அடி அகலத்திற்கு கருங்கல் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டப குளம், எண்கோணத்தில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. அதன் நடுவே, யாழி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.மகா மண்டபத்தில் கும்பாபிஷேகம் நடத்தியது போல, குளத்திற்கு கும்ப நீர் சேர்த்து, தடாக பிரதிஷ்டை நடத்தப்பட்டது.

இலவச பால்: இங்குள்ள கோ சாலையில், 140 பசுக்கள்ஜீவிக்கின்றன. கோ சாலை பசுக்களின் பால் விற்பனை செய்யப்படுவதில்லை. மண்டப அபிஷேகம், அன்னதானம் போக, மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.யஜுர்வேத பாடசாலைமகா மண்டபம் அருகே தங்கும்அறைகளும் உள்ளன. இங்கு, யஜுர்வேத பாடசாலை இலவசமாக நடத்தப்படுகிறது. மணிமண்டபத்திற்கு தனி நந்தவனம் உள்ளது. தற்போது 12 ஏக்கர் பரப்பளவில், மகா மண்டபம், ஆன்மிக புகழ் பரப்பும் தலமாக காட்சியளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர்-

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், 500 நடன கலைஞர்கள் பரத நாட்டியம், கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., துாரம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை, இளையான்குடி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar