காஞ்சிபுரம் : தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று மாலை காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில், சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வரும் காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து, ஆசி பெற்றார்.
இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் கூறியதாவது:அரசு பணியை ராஜினாமா செய்து, 52 ஆண்டு காலம் பொதுப்பணியில் ஈடுபட்டிருந்தேன். அதற்கான அங்கீகாரம் எனக்கு அளித்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.எங்கள் குடும்பம், சங்கர மடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டது. இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளதால், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து, ஆசீர்வாதம் பெறுவதற்காக வந்தேன்.வரும் 26ம் தேதி, சென்னையில் இருந்து புறப்படுகிறேன். 27ல் மணிப்பூர் கவர்னராக பொறுப்பேற்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.