திருச்செந்துார் நாழிக்கிணற்றில் புனித நீராட மீண்டும் தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2021 01:08
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாழிக்கிணற்றில் புனித நீராட மீண்டும் தடை விதிக்கப்பட்டது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தினசரி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று முன்தினம் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். தினசரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நேற்று முதல் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராடஅனுமதி அளிக்கப்படவில்லை. அதனால் நேற்று கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் மட்டும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் நாழிக்கிணறு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.