பதிவு செய்த நாள்
26
ஆக
2021
03:08
ஏரல்: ஏரல் வண்டிமலைச்சி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. ஏரல் மேலத்தெரு செங்குந்தமுதலியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டவண்டிமலைச்சி அம்மன்
கோயில் மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த 23ம் தேதி முதல் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. 23, 24ம் தேதிகளில் பல்வேறு பூஜைகள், தீபாராதனை மற்றும் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று மஹாகும்பாபிஷேகம் நடந்தது.
காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 4ம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை 9.54 மணி முதல் 10.24 மணிக்குள் விமான கலசங்கள், பரிவார தேவதைகள், வண்டிமலைச்சி அம்மன், வண்டிமலையான் சுவாமி, வீரபத்திரர், சக்திவிநாயகர், பாலமுருகன் சீதாலட்சுமண சமேத ராமசந்திர மூர்த்தி, ஹனுமன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹாகும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனை பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை தரிசித்து அம்மனை வழிபட்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை சமுதாய தலைவர் குருசாமி முதலியார், திருப்பணி கவுரவத்தலைவர் தனுஷ்கோடி முதலியார், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் சுப்பிரமணியன் ஒருங்கிணப்பாளர் சொக்கராமலிங்கம், கவுரவ ஆலோசகர் விவேகானந்தன் மற்றும் இளைஞரணியினர் செய்திருந்தனர்.