Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் நிலத்திற்கு இழப்பீடு; ... மகத்தான வரம் அருளும் பெரிய மாரியம்மன் மகத்தான வரம் அருளும் பெரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓரிக்கையில் தெய்வ ஓவிய கண்காட்சி துவக்கம்
எழுத்தின் அளவு:
ஓரிக்கையில் தெய்வ ஓவிய கண்காட்சி துவக்கம்

பதிவு செய்த நாள்

27 ஆக
2021
10:08

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஓரிக்கையில் அமைந்துள்ள மஹா சுவாமிகள் மணி மண்டத்தில், ஓவியர் ஏ.மணிவேலு வரைந்த பல்வேறு ஹிந்து கோவில் சுவாமி ஓவியங்கள் கண்காட்சி நேற்று துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலாயா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராகவன் திறந்து வைத்தார்.

மூலவர் சுவாமிபின், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஓவியங்களை பார்வையிட்டார். இந்த ஓவிய கண்காட்சி, அடுத்த மாதம் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.கோவில்களில் மூலவரை அதே அலங்காரத்தில் காண்பது போல் அந்த ஓவியங்கள் அமைந்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு கோவிலாக சென்று, அந்த ஊரில் தங்கி கோவிலின் சுவாமியை பற்றி முழுமையாக அறிந்து கொண்டு, மூலவர் சுவாமியை வரைவதற்கு அனுமதி பெற்று, மணிவேலு வரைந்த ஓவியங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சிக்கு, சென்னை டாட் ஸ்கூல் ஆப் டிசைன் ஏற்பாடு செய்திருந்தது.ஓவியர் மணிவேலு, 80, தமிழகத்தில் உள்ள பழைமையான அனைத்து கோவில்களின் மூலவர் உருவத்தை ஓவியமாக வரைந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடைசியாக திருவண்ணாமலை அண்ணாமலை சுவாமியை ஓவியமாக வரைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 500 ஓவியங்கள்இது குறித்து ஓவியர் மணிவேலு கூறியதாவது:எனது ஊர் சிக்கல். எங்கள் குடும்பம், பரம்பரை பரம்பரையாக சிற்பம் தொழில் செய்து வந்தவர்கள். அதன் வழியில் வந்த நான், என் தந்தையிடம் கலையின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.ஒரு படம் வரைவதற்கு, குறைந்த பட்சம் 25 நாட்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும். 1980 முதல், சுவாமி ஓவியங்கள் வரைய துவங்கினேன். இது வரை, 500 ஓவியங்கள் வரைந்துள்ளேன். இதற்கு முன் தஞ்சாவூரில் என் ஓவிய கண்காட்சி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar