தட்சணாமூர்த்தி கோவிலில் முப்பெரும் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2021 04:08
ஆனைமலை: ஆனைமலையில் உள்ள தட்சணாமூர்த்தி கோவிலில், முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ஆனைமலையில் உள்ள, வியாச பரண சாலை தட்சணாமூர்த்தி கோவிலில், நேற்று, தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின், 91வது ஜெயந்தி விழா, தட்சணாமூர்த்தி நுழைவுவாயில் திறப்பு விழா மற்றும் தட்சணாமூர்த்தி கும்பாபிஷேக ஆண்டு விழா, என, முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.பேரூராதீனம் மருதாச்சல அடிகளார், அஜித் சைத்தன்யா சுவாமிகள், ஆனைகட்டி ராமன் மற்றும் ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றனர். இதில், தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்திலுள்ள லலிதாம்பாள் அம்மன் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபட்டனர்.