நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு உணவு பாதுகாப்பு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு துறை சார்பில், ஹிந்து சமய அறநிலையத் துறை, தனியார் கோயில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானம் தரமாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்படுகிறது. தரமாக இருந்தால், கடவுளுக்கு வழங்கப்படும் சுகாதாரமான பிரசாதம் (Blissful Hygienic Offering to God) என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது.தமிழகத்தில் 60 கோயில்கள் இந்த தரச்சான்றை பெறுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலாவது கோயிலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு வழங்கப்பட்ட தரச்சான்றிதழை கலெக்டர் அரவிந்திடம் இருந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் பெற்றுக் கொண்டார்.