காரைக்காலில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2021 02:08
காரைக்கால்: காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலவகையான விநாயகர் சிலை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் ஆக. 10ம் தேதி மிக விமர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இதனால் காரைக்காலில் பல இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தி கடலில் விடுவர்.இதனால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கும் பணிகள் வழக்கமாக உள்ளது.மேலும் ஆண்டு தோறும் நிரவியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் கூடத்தில் விநாயகர் தயாரிக்கு சிற்பக்கலைஞர் சிவசுப்ரமணியன் முன்னிலையில் சிலைகள் தயாராகிறது. பேப்பர், கிழங்குமாவு கூழ்கொண்டு விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு இறுதியாக வர்ணம் பூசப்படுகிறது. சிலைகள் 2 அடி முதல் 10அடி வரை தயாரிக்கப்படுகிறது.ஆஞ்சநேயர், சிங்க வாகனம்.மூஞ்சுறு,ரிஷப் வாகனம், சிவலிங்கத்தின் மீது விநாயகர் என பல வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போல் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. சிலைகள் அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு அனுப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மாவட்டத்தில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் பாதுகாப்புடன் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சிலைகள் அனைத்து தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மேலும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.