திருநெல்வேலி: நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோயிலில் ஆவணி மூலத்திருநாள் சிறப்பாக நடைபெறவேண்டி பக்தர்களின் கூட்டுவழிபாடு நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருநாள் வரும் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சுவாமி நெல்லையப்பர் 15ம் தேதி மானுாருக்கு சென்று கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் சிறப்பாக நடைபெறவேண்டி பக்தர்களின் கூட்டு வழிபாடு நடந்தது. திருவனந்தல் வழிபாட்டுக்குழுவினர் அம்பையப்பர் விநாயகர் முன் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.