துாத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா: கொரோனாவால் எளிமையாக கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2021 02:08
துாத்துக்குடி: துாத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆடம்பரம் இல்லாமல் எளிமையா கொண்டாடப்பட்டது. இருப்பினும் கிருஷ்ணர் வேடமணிந்து குழந்தைகள் குதுாகலம் அடைந்தனர்.
நாடு முழுவதும் நேற்று கோகுலாஷ்டமி விழா விமரிசையாக நடந்தது. துாத்துக்குடியில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி திருவிழா போன்றவை பெரிய அளவில் நடக்கவில்லை. நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி துாத்துக்குடி பங்களா தெருவில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவை நடந்தது. பி அண்டி காலனியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக விசேஷமாக கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று காலை ஸ்ரீ ராதா கோவிந்தர் கிருஷ்ண சைதன்யர், வெங்கடேஷ பெருமாள், ஜெய் ஸ்ரீ நரசிம்மர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. மாலையில் ஆரத்தி நடந்தது. கோயிலுக்கு கிருஷ்ணர் வேடமணிந்து சிறுவர்கள் குடும்பத்துடன் வந்து வழிபாடு நடத்தினர். அதிகமான குட்டீஸ்கள் கிருஷ்ணர் வேடமணிந்து வந்து ஜெயந்தி விழாவை உற்சாகப்படுத்தினர்.