விழுப்புரத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2021 02:08
விழுப்புரம் : கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, விழுப்புரம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் உறியடி நிகழ்ச்சி நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், கோவில் எதிரே உறியடி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர். திண்டிவனம் திண்டிவனம் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில், சிறுவர்கள் உட்பட 7 இளைஞர்கள் கிருஷ்ணர் வேடம் அணிந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் நடந்த பூஜையில் பங்கேற்றனர். பின்னர், அங்கிருக்கும் வெண்ணெயை திருடி எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.